
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சோழபுரம் அய்யா நல்லூரை சேர்ந்த கோகுல் என்ற 24 வயது இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட உடல் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 12ஆம் தேதி இரவு நேர வேலைக்கு சென்றவர் கடைக்கு வரவில்லை என்று அவருடைய வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோகுலின் நண்பர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் நகைக்காக அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் அவரை கொலை செய்து உடலை புதைத்துள்ளனர். புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்த போலீசார் கொலைக்கான காரணம் பற்றி விரிவாக விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.