ஒடிசாவில் உள்ள வனப்பகுதியில் இளம் பெண் கிரிக்கெட் வீரர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கட்டாக் மாவட்டத்தில் ராஜஸ்ரீ ஸ்வைன் என்ற பெண் கிரிக்கெட் வீரரை காணவில்லை என அவரது பயிற்சியாளர் புதன்கிழமை மங்கல்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரைத் தேடியபோது, ​​வெள்ளிக்கிழமை காலை அட்டாகாட் வனப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடலில் காயங்கள் இருப்பதை கண்ட போலீசார், இது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.