இளம் இசை அமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உடல் நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். தமிழில் மேதகு, சிவப்பி ஆகிய படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவருடைய இறுதி ஊர்வலம் இன்று மாலை 6:00 மணி அளவில் வடக்கு வாசல் இல்லத்தில் தொடங்குகின்றது. 28 வயதே ஆன இவரின் மரணம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.