
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மியாப்பூர் நகரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்காரெட்டி மற்றும் ஜனார்த்தன் ரெட்டி ஆகியோர் அங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த நிலையில் அவரின் அழகில் மயங்கிய சங்காரெட்டி மற்றும் ஜனார்த்தன் இருவரும் அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பாக நடந்து வரும் கட்டுமான பணிகளை பார்வையிட வேண்டும் என்று கூறி அந்த பெண்ணை அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள பணிகளை சுற்றி காண்பித்த பிறகு காரில் ஏறி புறப்பட தயாராக இருந்தபோது கார் பழுதடைந்து விட்டதாக கூறி ஏமாற்றியுள்ளனர். அதனை நம்பி அந்தப் பெண்ணும் காரிலேயே அமர்ந்திருந்த நிலையில் அவரிடம் நைசாக பேசி குளிர்பானம் சாப்பிட கொடுத்துள்ளனர்.
அதில் மயக்க மருந்து கலந்தும் சில இனிப்பு வகைகளையும் கொடுத்துள்ளனர். இதனை சாப்பிட்டதும் அந்த இளம் பெண் மயக்கம் அடைந்த நிலையில் அவரை பலாத்காரம் செய்தனர். இருவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை விடிய விடிய மாறி மாறி பலாத்காரம் செய்தனர். காலையில் மயக்கம் தெளிந்த அந்த இளம் பெண் தன்னுடைய நிலையை எண்ணி கதறி துடித்தார். இந்த சம்பவம் குறித்து இளம் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.