இளநிலை நீட் தேர்வுக்கான சிட்டி ஸ்லிப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 499 நகரங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இணையதளத்தில் வெளியிடப்பட்ட சிட்டி ஸ்லிப்பில் மாணவர்கள் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட நகரத்தின் பெயர் இடம் பெற்று இருக்கும். நீட் தேர்வுகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டு வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து தேர்வுகள் வருகின்ற மே 7ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.