
இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தின் கீழ் அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த ஆண்டை போல இல்லம்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அதே சமயம் தேசியக் கொடிக்கு முன்பு செல்பி எடுத்து அதனை http://https//harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு பதிவிடுபவர்களுக்கு மத்திய அரசு சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். எல்லாம் தோறும் தேசியக்கொடி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தேசியக்கொடி விற்பனையை அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. ஒரு தேசியக் கொடியின் விலை 25 ரூபாய். இந்த தேசியக்கொடி அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் எனவும் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் http://www.epostoffice.com/ என்ற ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து தேசிய கொடியை பெறலாம்.