
இந்தியாவில் உள்ள பிரபலமான பால் நிறுவனங்களில் ஒன்றாக அமுல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது பால் விலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி அனைத்து வகையான பால் வகைகளும் இன்று லிட்டருக்கு ₹2 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கடைசியாக கடந்த வருடம் ஜூன் மாதம் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது தான் மீண்டும் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.