தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நிலையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநகர மற்றும் டவுன் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக சென்று வரலாம். இந்நிலையில் இலவச மகளிர் பேருந்தில் தற்போது பெண் பயணி ஒருவர் டிக்கெட் எடுக்காமல் சென்றதால் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது திருப்பூர் மற்றும் புளியம்பட்டி இடையே நேற்று அரசு டவுன் பேருந்து ஒன்று நேற்று காலை பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதில் ஏராளமான பயணிகள் பயணித்தனர்.

அப்போது அந்த பேருந்து ஏறிய பெண் பயணி ஒருவர் டிக்கெட் எடுக்காத நிலையில் டிக்கெட் பரிசோதகர் அது பற்றி பெண்ணிடம் கேட்டார். அதற்கு அந்த பெண் டிக்கெட் எடுப்பதற்குள் பேருந்து நிறுத்தம் வந்துவிட்டதாக தெரிவித்தார். அந்தப் பெண் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த குற்றத்திற்காக 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் தன் கையில் காசு இல்லை என்று கூறி போன் மூலமாக பணத்தை அவருக்கு அனுப்பினார். மேலும் இது பற்றி கேட்டபோது இலவச பேருந்து பயணம் என்றாலும் கண்டிப்பாக பெண்கள் அதில் டிக்கெட் எடுத்துவிட்டு பயணம் செய்வது அவசியம் என்றும் டிக்கெட் எடுக்காவிடில் அது குற்றம் என்பதால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.