
ஜியோ நிறுவனமானது ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை 189ரூபாய் ஆகவும், 28 நாள்களுக்கு 299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் 349 ரூபாய் ஆகவும், 399 என்ற மாதாந்திரக் கட்டணம் 449 ரூபாய் ஆகவும் உயர்த் தியுள்ளது. இந்நிலையில், கட்டணத்தை உயர்த்தியதோடு 2 மலிவு விலை ப்ரீபெய்டு திட்டங்களையும் சத்தமில்லாமல் நீக்கியது ஜியோ.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள். இந்த நிலையில், 90 நாள் வேலிடிட்டி கொண்ட ரூ899 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, கூடுதலாக 20 ஜிபி டேட்டா பெறலாம் என்று அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ சினிமா OTT-யும் இலவசமாக் கிடைக்கும். 5ஜி எனில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.