கடந்த மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில் இந்திய ரூபாயை இலங்கையில் பொது பணமாக பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அங்கு ஏற்கனவே சீனாவின் யென்  அமெரிக்காவின் டாலர் போன்றவை பரிமாற்றத்துக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று இந்திய ரூபாயையும் உள்ளூர் பரிமாற்றத்திற்கு அனுமதி கொடுப்பது பற்றி பரிசீலிப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் மத்திய வங்கி நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பணமாக இலங்கையில் இந்திய ரூபாய் இருந்திருந்தாலும் இது உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு செல்லாது. இது குறித்து இணையதளத்தில் பரவும் தவறான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.