
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மாவை சேனாதிராஜா. இவருக்கு 82 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவினால் நேற்று இரவு காலமானார். இவர் இலங்கை தமிழர்களுக்காக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 1989 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2000, 2010, 2015 ஆம் ஆண்டுகளிலும் நாடாளுமன்றத்தில் இலங்கை தமிழர் நலனுக்காக குரல் கொடுத்தார். கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக பணிபுரிந்தார். மேலும்இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.