
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் மாரிமுத்து. இவர் பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் டப்பிங் பணியை முடித்துவிட்டு வெளியில் கிளம்பும்போது மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மாரிமுத்து இறப்பதற்கு முன்பு ரீல் மகள் மோனிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவை நடிகை மோனிஷா தற்போது சமூக வலைத்தளத்தில் கவலையுடன் பகிர்ந்து உள்ளார். ஆனால் அப்போது பிறந்த நாள் இல்லாத காரணத்தால் அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மாரிமுத்து கூறியிருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோனிஷாவுக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு மாரிமுத்து உயிருடன் இல்லை. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க