
இணையத்தில் மனதை உலுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, தாய் குரங்கு ஒன்று ஏதோ ஒரு விபத்தில் இறந்து போன நிலையில், அதனுடைய குழந்தையான குட்டி குரங்கு தாயிடமிருந்து பிரியாமல் இறுக்கி அணைத்தபடி இருக்கிறது. இதைக் கண்ட சிலர் அந்த குரங்கை நல்லபடியாக அடக்கம் செய்ய நினைத்து குழி தோண்டி புதைக்க முயன்றனர். ஆனால் குழிக்குள் குரங்கை இறக்கிய பின்பு குட்டி குரங்கை தாயிடமிருந்து பிரித்து காப்பாற்ற இளைஞர் ஒருவர் முயற்சி செய்கிறார்.
ஆனால் குரங்கோ தன்னை காப்பாற்றுபவரை உதறிவிட்டு மீண்டும் தாயிடம் குழிக்குள் இறங்கி சென்று இறுக்கி அணைத்துக் கொள்கிறது. அவர் பலமுறை வெளியே எடுக்க முயற்சி செய்தும் அந்த குட்டி குரங்கு தாயிடமிருந்து பிரிய மனமில்லாமல் அவர் கையை உதறிவிட்டு மீண்டும் மீண்டும் குழிக்குள் சென்று தாயை அரவணைத்துக் கொள்கிறது. இந்த வீடியோ பலரையும் கலங்கடித்ததுடன் சில மணி நேரங்களுக்கு இந்த காணொளி தங்களது மனதில் மறக்கடிக்கப்படாமல் வந்து கொண்டே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram