பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும் மாமியார் கீதாவிற்கு 45 வயதும் ஆகிய நிலையில் மருமகன் சிக்கந்தருக்கு மாமியார் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய நெருக்கம் தினேஷுக்கு  சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் இறுதியில் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

பஞ்சாயத்திற்கு அழைத்து வரப்பட்ட விசாரித்த போது இவர்களுடைய காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிக்கந்தரின் சம்மதத்தோடு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டதோடு சட்டப்படியும் நீதிமன்றத்திலும் திருமணம் நடைபெற்றுள்ளது. மனைவியை மருமகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு அவரை இரண்டாவது கணவர் வீட்டிற்க்கும்  அனுப்பி வைத்துள்ளார். இந்த காதல் கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு அந்த மாமனாரை பலரும் பாராட்டி வருவதுடன் மீம்ஸ்களையும் அள்ளி வீசி வருகிறார்கள்.