பீகார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இடது கண் காணவில்லை என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உறவினர் ஒருவர் கூறியதாவது, வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் எங்களது உறவினர் குமார் என்பவரை பாட்னாவில் இரண்டாவது பெரிய மருத்துவமனையான நாலந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சனிக்கிழமை அதிகாலை குமாரின் உடலை பெற உறவினர்கள் வந்தனர். நானும் சென்று பார்த்தேன். குமாரின் இடது கண் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். வியாபார நோக்கத்தோடு மருத்துவர்கள் கண்ணை எடுத்து விட்டார்கள் என நாங்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டோம். அவர்கள் இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியுமா?.

கொலை செய்தவரோடு இணைந்து மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் சதி செய்து இருக்கிறார். அப்படி இல்லாவிட்டால் மருத்துவமனை மக்களின் கண்களை பறிக்கும் தொழிலில் ஈடுபடுவதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது மருத்துவமனையில் எலி பிரச்சனை இருக்கிறது. எலி கடித்திருக்கலாம் என பதில் சொல்கின்றனர் என கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காய்ச்சலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.