தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பாலசுப்பிரமணியம் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த வள்ளி என்ற மனைவி உள்ளார். ஆனந்தவள்ளி அப்பகுதியில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அண்ணன் மகன் முருகன் மது குடித்துவிட்டு அப்பகுதியில் இருப்பவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனை கண்டித்த ஆனந்த வள்ளியை முருகன் சரமாரியாக தாக்கினார். பதிலுக்கு ஆனந்த வள்ளியின் மகன்கள் முருகனையும் அவரது தாய் சரோஜாவையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் முருகன், ஆனந்த வள்ளியின் மகன் மாடசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.