
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கும் தனுஷ் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் இரவு 10 மணிக்கு மேல் ஒரு 32 வயது பெண்ணின் வீட்டிற்குள் திடீரென புகுந்தார்.
அதாவது அவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கவனித்தார். அந்த வீட்டிலிருந்த பெண் தன்னுடைய கணவர் திருவிழாவிற்கு சென்றிருந்ததால் அவருடைய வருகையை எண்ணி கதவை திறந்து வைத்தவாறு படுக்கையில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தனுஷ் திடீரென வீட்டிற்குள் புகுந்த நிலையில் அதனை பார்த்ததும் அந்த பெண் அலறினார்.
ஆனால் அந்த பெண்ணின் வாயை போத்தி கதற கதற அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். அந்தப் பெண் சத்தம் போட்ட நிலையிலும் கோவில் திருவிழா என்பதால் ஒலிபெருக்கி சத்தத்தில் அவரின் சத்தம் வெளியே கேட்கவில்லை. இந்நிலையில் இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என தனுஷ் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தனுஷை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.