
சென்னை துரைப்பாக்கத்தில் நேற்றிரவு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட யோகேஸ்வரன் (24) என்பவரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன், பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். 4 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல்நிலைய கழிவறையில் கைதான யோகேஸ்வரன் வழுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.