
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப், அணியின் தொடர்ச்சியான தோல்விகளை விமர்சிப்பவர்களுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். நியூசிலாந்து தொடரில் தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான், கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதுகுறித்து போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஹாரிஸ் ரவுஃப், “இப்போது பாகிஸ்தானில் யாரும் அணியை ஆதரிக்க மாட்டார்கள், தோல்வி ஏற்படும்போது விமர்சிக்கத்தான் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.
மேலும், “இளம் வீரர்களுக்கு தங்களை நிரூபிக்க 10-15 போட்டிகள் தேவை, ஆனால் அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்” எனவும், “முதிர்ந்த வீரர்களாக நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும், சர்வதேச கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்பதைக் கூற வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
ஷொயிப் அக்தர் – “பாகிஸ்தானில் எந்த திறமையும் இல்லை”
பாகிஸ்தான் அணியின் தொடர்ச்சியான தோல்விகளை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷொயிப் அக்தர், முகமது ஹஃபீஸ் மற்றும் ஷொயிப் மலிக்குடன் பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, “பாகிஸ்தான் அணியில் எந்த தனிச்சிறப்பு திறமையும் இல்லை, கடந்த 20 ஆண்டுகளாக நாம் இதையே கேட்கிறோம். திறமை இருந்திருந்தால், அது வெளிப்பட்டிருக்கும்” எனக் கூறினார். முகமது ஹஃபீஸ் இதற்கு பதிலளிக்கும்போது, “திறமை இருக்கிறது, ஆனால் திட்டமிடல் இல்லை” என்றார். ஆனால், ஷொயிப் அக்தர் அதைக் கடுமையாக மறுத்து, “திறமை இருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் அது காட்டியிருப்பார்கள்” என கூறினார்.
Haris Rauf’s post-match press conference in Dunedin | Pakistan vs New Zealand, 2nd T20I#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/460sEL41Bg
— PCB Media (@TheRealPCBMedia) March 18, 2025
“>
முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியின் மோசமான நேரம்
பாகிஸ்தான் அணியின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. முகமது ரிஸ்வான் தலைமையில், பாகிஸ்தான் தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியிடம் ODI தொடரை இழந்தது. மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே ஒரு வெற்றியும் இல்லாமல் வெளியேறியது, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணியின் தொடர்ச்சியான தோல்விகளால், அணியின் அணுகுமுறையையும், புதிய தலைமை மாற்றத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியின் மீட்பு சாத்தியமா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது.