
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவர்கள் சில வழக்கமான சிகிச்சைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மான் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தை செய்தனர்.
மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ரஹ்மானுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர் முழுமையாக நலமுடன் இருப்பதாகவும், தற்போது வீடு திரும்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், அவரது ஆரோக்கியத்தைப் பற்றிய உறுதிப்படுத்தல்கள் வைரலாக பரவி வருகின்றன. ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அவர் விரைவில் நலமடைய வேண்டும் என கூறி வருகின்றனர்.