நடிகை நயன்தாரா, 50 வினாடி விளம்பரத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் அவர், சினிமாவில் நடிக்க ₹10 கோடி சம்பளம் வாங்குகிறார். அண்மையில் டாடா ஸ்கை நிறுவனத்தின் 50 வினாடி விளம்பரத்துக்கு ₹5 கோடி வாங்கியுள்ளார். 2 நாள்கள் வரை அந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் பங்கேற்ற அவரது காட்சி, விளம்பரமாக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.