கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற சில வாலிபர்கள் வீலிங் செய்தனர். இதனை அந்த வழியாக சென்ற கார் ஓட்டுநர் ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் அந்த வாலிபர்கள் தட்டி கேட்டவரின் காரை உதைத்து அட்டூழியம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் தாமாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சஞ்சய் உட்பட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவது கூட சில சமயங்களில் நமக்கே ஆபத்தாக அமைகிறது என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.