இங்கிலாந்து நாட்டில் ராச்சனா ஆண்டர்சன் என்ற 41 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் வீட்டின் அருகே ஸ்காட் பைன் மரம் உள்ளது. இந்த மரத்தினால் அந்த பெண்ணுக்கு அலர்ஜி ஏற்படுகிறதாம். அதாவது வீட்டில் இருக்கும் போது அந்த பெண்ணுக்கு மரத்தால் தோல் எரிவது போன்று அலர்ஜி ஏற்படுகிறது. அவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அந்த பிரச்சனை ஏற்படுவது கிடையாது. வீட்டில் இருக்கும் போது மட்டும்தான் மரத்தினால் இப்படிப்பட்ட அலர்ஜி ஏற்படும் நிலையில் அந்த பெண்ணால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக அதிகாரிகளிடம் மரத்தை வெட்டுவதற்கு அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர். இதன் காரணமாக அந்த பெண் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடிபெயர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு மரத்தினால் அலர்ஜி ஏற்பட்ட நிலையில் அதற்காக வீட்டை காலி செய்யாமல் நாட்டை விட்டே அந்த பெண் வெளியேறுவது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.