
சமூக வலைதளத்தில் எத்தனையோ காணொளிகள் வெளியாகி வைரல் ஆகிறது. சுட்டிக் குழந்தைகளின் குறும்புகள், மிருகங்களின் சேட்டைகள், பலரது வித்தியாசமான யோசனைகள் என அனைத்தும் இதில் அடங்கும் அதே நேரம் அறிய தகவல்கள் பற்றிய காணொளியும் அவ்வப்போது வெளியாகும். ஆனால் அது போன்ற காணொளிகள் உண்மையானது தானா அல்லது போலியானதா என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தற்போது காணொளி ஒன்று வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அந்த காணொளியில் கண்ணாடி போன்ற உருவமுடைய மீனை ஒருவர் கையில் வைத்திருப்பது போன்று உள்ளது. அந்த மீனின் உடலில் எந்த பாகங்களும் தெரியாத நிலையில் மீனைப் பிடித்திருந்தவரின் கை தான் அதன் உடல் வழியாக தெரிகிறது. இந்த காணொளி உண்மையானது தானா அல்லது போலியானதா என்பதை பற்றி தெரியவில்லை. ஆனால் இது உண்மையானதாக இருந்தால் இத்தகைய உயிரினம் இயற்கையின் அதிசயமாகத்தான் பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
Transperant fish, cannot see any organs, except the eyes.pic.twitter.com/wFCEzOA1yk
— The Best (@ThebestFigen) August 1, 2023