
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதன் மூலம் ஒரு பெண் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இதற்காக அவர் கடின உழைப்பை கொடுத்துள்ளார் என்பதில் சந்தேகம் கிடையாது. அமெரிக்க நாட்டில் ஹம்பரே என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு 33 வயது ஆகவும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்.
இதனை அவர் ஒரு தொழிலாகவே செய்து வரும் நிலையில் இதுவரையில் 1.15 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இவர் குழந்தைகளுக்கு பெயரை தேடுவதற்காக மிகவும் முயற்சி செய்கிறார். அந்த பெற்றோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் சம்பவங்கள், இடங்கள் போன்றவற்றை கூட பெயர்களில் சேர்த்து வைக்கும் திறமை இருக்கிறது. மேலும் இதன் காரணமாக ஹம்ப்ரேவுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடும் நிலையில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக அவருடைய உதவியை நாடுகிறார்கள்.