மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெங்கட் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வைத்தீஸ்வரன்(17).இந்த சிறுவன் ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அக்ரி குரூப் படித்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்களுடன் வைத்தீஸ்வரன் விவசாய களப்பயிற்சிக்காக வாசி மலையான் கோயிலுக்கு சென்றனர். முன்னதாக வைத்தீஸ்வரனின் தோட்டத்தில் கரும்பு நடவு செய்தது, அருகில் இருந்த கோழி பண்ணை ஆகியவற்றை மாணவர்கள் பார்வையிட்டனர்.

அப்போது சில மாணவர்கள் மட்டும் கிணற்றில் குளிக்க சென்றனர். அப்போது தண்ணீரில் மூழ்கி வைத்தீஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வைத்தீஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா மாணவர்களை கள பயிற்சிக்கு அழைத்துச் சென்ற விவசாய பாட ஆசிரியர் ஆறுமுகத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.