சமூக வலைதளங்களில் எப்போதும் சிரிப்பூட்டும் வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. அப்படியொரு வீடியோ தான் தற்போதும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர், கால்வாயில் சிக்கிய பூனைக்குட்டியை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அதே நேரத்தில், பூனைக்கு உதவி செய்யும் போது எதிர்பாராதவிதமாக அவரே அந்தக் கால்வாயில் விழுந்துவிடுகிறார்.

பூனை பாதுகாப்பாக மீட்கப்பட்டது என்றாலும், அந்த நபரின் “மரியாதை” அடியோடு போய்விட்டதாக நெட்டிசன்கள் கலகலப்பாக கருத்து பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை @BunnyFriendy என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. “சூப்பர்ஹீரோவின் தோல்வியடைந்த எண்ட்ரி” என்றும், “பூனை பிழைத்தது, ஆனா அண்ணன் மரியாதையை இழந்துட்டாரு” என்றும் பலர் நகைச்சுவையுடன் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.