ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டு வரும் நிலையில்  குஜராத் அணிக்காக விளையாடும் தென்னாபிரிக்க வீரர் கசிகோ ரபாடா தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அதாவது, கிரிக்கெட் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதற்காக Flat-ஆக இல்லாமல் எல்லாம் போட்டியிலும் ஒரே மாதிரியாக மாறிவிடக்கூடாது. போட்டியின் பொழுதுபோக்கு தன்மையை அது கெடுத்து விடும்.

இப்படியே போனால் கிரிக்கெட் என்கிற பெயரை மாற்றிவிட்டு இந்த விளையாட்டுக்கு பேட்டிங் என்று பெயர் வைத்து விடலாம். ரெக்கார்டுகள் உடைக்கப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி தான். அதிரடியாக விளையாடி ஸ்கொர்களை குவிக்கும் போட்டிகளை வரவேற்கிறேன். ஆனால் அதேபோல குறைவான ஸ்கோர் எடுக்கும் ஆட்டங்களையும் வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.