திமுக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது, டான்ஸ்டன்ட் சுரங்கத்திற்கு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்தாரா.? புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்தி பேசிய அமித்ஷாவுக்கு எதிராக கீக்குரலில் கூட அவர் கத்தவில்லை. பிரதமர் மோடியை எதிர்த்து பேசுகிற துணிவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா? என்றார்.

அதன் பிறகு அதிமுக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 19.4 சதவீத வாக்குகளும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு 20.4 சதவீத வாக்குகளும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 12.58 விழுக்காடுக்கும் குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக கழகத் தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல், வகுத்தல்  கணக்கு கூட தெரியாது என்று நினைத்து பொய் கணக்கை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி சொன்ன அந்த கணக்கை நம்ப மாட்டார்கள் என்றார்.