கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம் திட்டம் மாவட்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் கெவின் தாமஸ் (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருச்சூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த இளம் பெண்ணிடம் கெவின் காதலிப்பதாக கூறி பழகிய நிலையில் இருவரும் செல்போனிலும் அடிக்கடி பேசி பழகினர். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறிய கெவின் அவரை பார்க்க வேண்டும் என்று தனியாக அழைத்தார்.

அப்போது அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி புகைப்படங்கள் எடுத்தார். பின்னர் அந்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி அந்த இளம் பெண்ணை கெவின் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து கெவினை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.