
வேலூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் லைக்ஸ் பெறுவதற்காக வாலிபர் ஒருவர் பெண் போல வேடமடைந்து சொகுசு பைக்கில் வலம் வந்தார். அவர் பழைய பேருந்து நிலையம் கல்லூரி அமைந்திருக்கும் பகுதிகள், முக்கிய வீதிகளில் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்.
மேலும் கல்லூரி முடிந்து வரும் பெண்கள் முன்னிலையில் வேகமாக செல்வது, மாணவிகள் வியப்பாக பார்ப்பது ஆகியவற்றை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்