
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும் உத்திரப்பிரதேச மாநிலம் ஜாலாவின் பகுதியை சேர்ந்த சாமா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் தன் காதலி சாமாவை காண பிரதீப் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சாமாவின் வீட்டில் இருந்தவர்களிடம் இருவரும் மாட்டிக்கொண்டனர். இதையடுத்து பெண் வீட்டார் உடனடியாக இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலியை காண காதலன் காதலி வீட்டிற்கு சென்ற நிலையில், இருவருக்கும் திருமணம் செய்து வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.