
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரங்க பாதைக்குள் மகேந்திரா கார்களின் மேற்கூரையில் நின்றபடி வாலிபர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டார்.
கடந்த மே மாதம் 17-ஆம் தேதி வாலிபர் ஒருவர் மஹிந்திரா கார்களின் மேற்கூரையில் நின்றபடி சுரங்க பாதைக்குள் சாகசம் செய்தார். மேலும் சம்பந்தப்பட்ட வாலிபர் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வீடியோவை பார்த்த போலீசார் வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து விசாரித்தனர்.
பின்னர் உரிமையாளர்களை கண்டுபிடித்து அவர்கள் மூலம் சாகசத்தில் ஈடுபட்ட இஸ்மாயில் என்ற வாலிபரை கைது செய்தனர். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே ரிலீஸ் மோகம் அதிகரித்துவிட்டது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு இதுபோன்று சாகசம் செய்யும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பொது மக்களுக்கு இடையூறாக இருப்பது மட்டுமில்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் அமைகிறது.