சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட 392 பணியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இன்று (மே 5) விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.  மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

மொத்தமாக 392 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், அலுவலக உதவியாளர் – 137, குடியிருப்பு உதவியாளர் – 87, சோப்தார் – 12, துப்புரவு பணியாளர் – 73, தோட்டக்காரர் – 24, அறை பணியாளர் – 4, வாட்ச்மேன் – 4, வாட்டர்மேன் – 2 ஆகிய பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுனர் உரிமம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப் பயிற்சி, ஹவுஸ் கீப்பிங் அனுபவம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2025 தேதியின்படி குறைந்தது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.  பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32; இதர பிரிவுகளுக்கு 37 வயது வரை அனுமதி உள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடைபெறும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.