தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். எமோஷனலான ஆக்ஷன் கதை களத்தில் உருவான இந்த படம் முதல் நாளில் இருந்து உலக அளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது என்றே சொல்லலாம். தன்னுடைய மனைவியை கடத்தியவர்களை அஜித் எப்படி கண்டுபிடித்து இருக்கிறார் என்பது தான் படத்தின் கதை.  இந்நிலையில் இப்படம் இன்று netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.