இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களுக்காக பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பிக்சட் டெபாசிட் திட்டத்திலும் அதிக அளவிலான வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிக்சட் டெபாசிட் தொகை காண வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 3 கோடிக்கும் குறைவான மொத்த டெபாசிட் களுக்கு 20 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி வழங்கப்பட உள்ளது. இதன் விளைவாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பொது பிரிவினர் அதிகபட்சமாக 7.40% மற்றும் மூத்த குடிமக்கள் 7.90 சதவீதம் வட்டியை பெறுவார்கள். இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூலை 24 இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.