தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.