மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. சென்னை மாநகரத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை இருக்கிறார்.தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாகவும் பேசப்பட உள்ளது.