
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நாமக்கல் மண்டலத்தில் கடந்த நான்கு வாரங்களாக குறைந்து காணப்பட்ட கறிக்கோழி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கறிக்கோழி உயிருடன் விலை ஒரு கிலோ பத்து ரூபாய் உயர்ந்த 85 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலையில் எவ்வளவு குறைந்தாலும் சில்லறை விற்பனை விலையில் அதன் விற்பனையாளர்கள் அமல்படுத்துவதில்லை. இதனால் இன்று சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 200 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனையாகின்றது.