தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம் தேதி இன்று வெளியாக உள்ளதாக அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது.