தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று முதல் மாநாடு குறித்த தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் சமீபத்தில் கட்சிக்கொடியினை அறிமுகப்படுத்தி தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்தார். இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜயின் முதல் மாநாடு நடைபெறும் என்று கூறப்பட்டது. இதற்காக விழுப்புரம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலக புஸ்ஸி ஆனந்த் அனுமதி கேட்ட நிலையில் அவர்கள் 21 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து புஸ்ஸி ஆனந்த் காவல்துறையினரிடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அனுமதி கிடைத்துவிட்டது. ஏற்கனவே செப்டம்பர் 23இல் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று நடிகர் விஜய் முதல் மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 11.17 மணிக்கு நடிகர் விஜயின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.