கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 14 தொகுதிகளில் இன்று நடைபெறஉள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் வாக்களிக்க விரும்பும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் இன்று ஒருநாள் ரேபிடோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ரேபிடோ இணை நிறுவனர் பவன் குண்டு பள்ளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.