
அமெரிக்க அதிபராக சமீபத்தில் ட்ரம்ப் பதவியேற்று கொண்டபோது இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவுக்கு பிரதமர் மோடிக்கு எதற்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் இன்று வலுவான அமைப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒருவேளை அவ்வாறு இருந்திருந்தால் பிரதமர் மோடியை அழைக்க அமெரிக்க அதிபர் விருப்பம் தெரிவித்திருப்பார். இந்தியாவில் தற்போது உற்பத்தி துறை என்பது வலுவாக இல்லை என்பதால் தொழில் பங்கு குறைவாக தான் உள்ளது.
அத்தகைய தொழில்நுட்பங்களில் நாம் பணியாற்றி இருந்தால் இன்று அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு நேரடியாக வந்து பிரதமர் மோடியை அழைத்து இருப்பார். எங்களுடைய பிரதமருக்கு அழைப்பு விடுங்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சரை நாம் பலமுறை அனுப்ப வேண்டிய அவசியம் வந்திருக்காது என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்த நிலையில் உங்கள் மன அமைதியை குறைத்ததற்காக மட்டுமே நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.