
தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. சென்னையை நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 7 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற் பகுதியில் கரையை கடக்கும் என தெரிகிறது.