
கோலிவுட்டில் நயன்தாரா தனுஷ் பற்றி தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். வெறும் 3 வினாடிக்காக 10 கோடி ரூபாய் கேட்பதா என நயன்தாரா தனுஷ் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவில் தனுஷை பற்றி நயன்தாரா பேசிய நிலையில் பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பி வருகின்றனர்.
தற்போது தைரியமாக முன்வந்து பேசி இருக்கிறார் என கூறுகின்றனர். யாரடி நீ மோகினி படத்தின் போது நயன்தாராவை தனுஷ் ரொம்ப டார்ச்சர் செய்தார். தனுஷும் கார்த்திக் குமாரும் சேர்ந்து நயன்தாராவுக்கு ரூட் விட்டனர். ஒரு ஹாய் சொன்னால் போதும் தனுஷ் உடனே நயன்தாரா தன்னை காதலிப்பதாக நினைத்து விடுவார். தனுஷ் முத்திப்போன சைக்கோ. வேணும்னா பாருங்க இன்னும் பத்து நாளில் 9 லீக்ஸ் வீடியோ வெளியாகும் அதை தனுஷ் தான் வெளியிடுவார் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.