தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். இவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அதற்கான பணிகளை தற்போதே தொடங்கியுள்ளார்.

நடிகர் விஜய் பிரம்மாண்ட மாநாடு நடத்தி அதில் தனது கட்சிக்கொடி, சின்னம் மற்றும் கொள்கைகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திருச்சியில் தீவிரமாக இடம் பார்த்து வரும் அவருக்கு இடம் கிடைக்க விடாமல் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பேசிய சீமான், விஜய் மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை என்றும் தனக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறி இத்தகவலை உறுதி செய்துள்ளார்.