இதுவரை TOEFL தேர்வானது 3 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இதனை 2 மணி நேரத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக TOEFL இன் உலகளாவிய தலைவர் ஹோமர் சிஹான் கூறியுள்ளார். தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் அனைவரும் எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் நிதானமாக தேர்வு எழுத வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

இந்தியாவிலிருந்து உயர்கல்விக்காக வெளிநாடு செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் 5 லட்சத்தை எட்டும் என்றும் ஊடக அமைப்பு ஒன்றியிடம் அவர் தெரிவித்துள்ளார்.