
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா புதிய உத்தரவை அறிவித்துள்ளார். மார்ச் 31 முதல், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது என அவர் தெரிவித்தார். அதாவது டெல்லியில் காற்று மாசுபாடு என்பது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக தற்போது 15 வருடங்கள் பழைய வாகனங்களுக்கு மார்ச் 31ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
குறிப்பாக பழைய வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக சிஎன்ஜி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியாவின் தலைநகரமான டெல்லி காற்று மாசுபாட்டால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அது மனிதர்கள் வாழ தகுதியற்ற நகராக மாறிவிடும் என்ற அச்சம் எழுகிறது. மேலும் இதன் காரணமாகத்தான் காற்று மாசுபாட்டை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் எதிரொலியாகத்தான் தற்போது இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.