
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.. அதன்படி வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஸ்கிரீன் ஷாட் பிளாக்கிங் -ப்ரோபைல் புகைப்படம் என்ற புதிய அம்சத்தை நிறுவனம் கொண்டு வர உள்ளது.
பயனர்களின் சுயவிவர புகைப்படங்களை மற்றவர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை இது தடுக்க உதவுகின்றது. இதனால் பயனர்களின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். தற்போது உருவாக்கப்பட்டு வரும் அம்சம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.