
டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா ஆகிய சில மாநிலங்களில் ஸ்விக்கி, பிக்பேஸ் கட், டொமேட்டோ மற்றும் அதன் விரைவான வர்த்தக பிரிவான பிலிங்க்கிட் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்வதற்கான பைலட் திட்டங்களை பரிசீலித்து வருகின்றன.
தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி, இந்த திட்டங்கள் பீர், ஒயின் மற்றும் மதுபானங்கள் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட பானங்களுடன் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் நடைமுறை இருக்கும் நிலையில், அதை மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.